உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இலங்கைக்கு இறுகும் நெருக்கடி : ஜெனிவாவில் இருந்து வெளியான அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகம் வெளியிட்ட காணொளி தென்னிலங்கை மட்டுமல்ல இலங்கை முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்சாக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே இந்த தாக்குதலை நடத்தியதாக குறித்த காணொளியில் சாட்சியமாக விளங்கும் பிள்ளையான் கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
Black Video (1) from Ellalan on Vimeo.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிவிப்பு
இந்த தாக்குதலை நடத்த யார்,யாரையெல்லாம் எப்படி பயன்படுத்தினார்கள் அதற்கு தானே நேரடி சாட்சியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதிர்வலைகளை ஏற்படுத்திய காணொளி வெளியான நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது.
