சனல் 4 இற்கு எதிராக பிள்ளையான் முறைப்பாடு
Sri Lanka Police
Easter
Sri Lanka
Sri Lankan Peoples
Easter Attack Sri Lanka
By Dilakshan
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இல் குறிப்பிடப்பட்ட கிராமப்புற வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான்,காவல்துறை மா அதிபரின் ஆலோசனையின் பின்னர் காவல்துறை குற்றவியல் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
சனல் 4 ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (6) சிவநேசதுரை சந்திரகாந்தன் முறைப்பாடு செய்ய முயற்சித்துள்ளார்.
காவல்துறை தலைமை ஆய்வாளர்
"காவல்துறை மா அதிபருடன் கலந்தாலோசித்து குறித்த முறைப்பாடை அவரது ஒப்புதலுடன் ஒப்படைக்குமாறு அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். நான் வியாழன் (7) சந்திப்பைப் பெற்றுள்ளேன்.
நான் காவல்துறை தலைமை ஆய்வாளருடன் பேசி ஆவணங்களை ஒப்படைப்பேன்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
