இந்திய அதிபருடன் ரணிலை ஒப்பிடும் அரசியல்வாதி
இந்திய அதிபரை எவ்வாறு மக்கள் தெரிவு செய்வதில்லையோ அதேபோல் தான் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் அதிபராக மக்கள் தெரிவு செய்யவில்லை என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்திய அதிபருக்கு ஒப்பானவர். இந்திய அதிபரையும் மக்கள் தெரிவு செய்வதில்லை.
மக்கள் தெரிவு செய்யாத அதிபர்
அதேபோல் ரணிலையும் மக்கள் தெரிவு செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களே ரணிலை தெரிவு செய்தனர்.ஆனால், தன்னை மக்கள் தெரிவு செய்ததாக ரணில் நினைத்துகொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.
ஹிட்லர் என தன்னை அடையாளப்படுத்த ஊடகங்களை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். ஊடகங்களை அச்சுறுத்தி எந்தவொரு நெருக்கடி நிலைமைகளையும் தீர்க்க முடியாது எனவும் கூறினார்.
வெளிநாட்டு கொள்கைகளை மறுசீரமைத்த லக்ஸ்மன் கதிர்காமர்
நாட்டின் வெளிவிவகார கொள்கைகள் தொடர்ந்து திருத்தப்பட்டு வருகிறது. அதனால் இலங்கையில் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் உறுதியற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளை மறுசீரமைத்தார் எனவும் கூறினார்.
