ராஜீவ் காந்தி கொலை வழக்கு - ரவிச்சந்திரனுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவு
Rajiv Gandhi
Tamil nadu
India
By Sumithiran
ராஜீவ் காந்தி கொலை வழக்கில்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் 142வது சட்டப்பிரிவின் மூலமாக தங்களை விடுதலை செய்யவும், பேரறிவாளனை போன்று தங்களையும் ஜாமீனில் விடுவிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
இந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது பரோலில் இருந்து வரும் ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்