அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க நாம் தயாராக இல்லை - சஜித் பிரேமதாச தெரிவிப்பு

Sajith Premadasa Samagi Jana Balawegaya
By Vanan Oct 08, 2022 12:50 PM GMT
Report

அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர தேர்தல் தொகுதிக் கூட்டம் இன்று (08) இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையில் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்,

அபிவிருத்தி வேலைத்திட்டம்

அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க நாம் தயாராக இல்லை - சஜித் பிரேமதாச தெரிவிப்பு | Part Of Political Scams Not Ready Sajith

“வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்ப அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று அவசியமாகும். எமது நாட்டுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதே புதிய பிரவேசமாக அமையும்.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் எவ்வளவு அழுத்தங்களும் அசௌகரியங்களும் இருந்தாலும் அதைக் குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த அரசாங்கத்தில் சமூக பாதுகாப்பு திட்டமொன்று இல்லை. ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்த வண்ணம் அமைச்சுகளை பெருக்கிக்கொள்ளும் பாதுகாப்புத் திட்டமே அவர்களுக்கு உள்ளது.

நாட்டை வங்குரோத்தடையச் செய்த நாமல் ராஜபக்ச பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பேரவைக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு, நாட்டின் கொள்கை முன்னுரிமைகளை உருவாக்குவதற்குத் தேவையான குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது நகைப்புக்குரிய விடயம்.

நாட்டை அழித்த ராஜபக்சர்களிடமிருந்து தீர்வுகள் காண வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மக்களை ஏமாற்றிய வண்ணம் செயற்பட்டு வருகின்றனர்.

அரசியல் மோசடிகள்

அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க நாம் தயாராக இல்லை - சஜித் பிரேமதாச தெரிவிப்பு | Part Of Political Scams Not Ready Sajith

இது போன்ற அரசியல் மோசடிகளில் அங்கம் வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ தயாராக இல்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்ட எதையும் இந்த அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்துவதாக இல்லை. அவர்கள் தங்களுக்கு நன்மை பயக்கும் பகுதியை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் பிரகாரம் உள்ளன. மக்களிடம் பொய் சொல்லாமல் 2.9 பில்லியன் டொலர்களை எமது நாட்டிற்கு பெறத் தேவையான ஆதரவை கேட்டால் அதை வழங்கலாம்.

அப்படி அல்லாமல், நாட்டுக்கு பொய் சொல்லி, எங்களிடம் உதவி கேட்டால், அதற்கு எவ்விதத்திலும் சம்மதிக்கவே மாட்டோம்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017