ரணில் அரசை வீழ்த்த வியூகம் வகுக்கும் கட்சிகள்
ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தைக் கைப்பற்றும் குறைந்தபட்ச இலக்குடன் ஒன்றிணைந்த எதிரணியை உருவாக்குவதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் நோக்கம் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும, திங்கட்கிழமை (12) தெரிவித்தார்.
ரணில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு சாத்தியமான பரந்த கூட்டணியை உருவாக்குவது அவசியமாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தமது கட்சி தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை தோற்கடிக்கும் பொதுவான இலக்கை நிறைவேற்ற
தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்கும் பொதுவான இலக்கை நிறைவேற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பாலம் அமைப்பதற்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் நோக்கம் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பொதுவான உடன்பாட்டை உருவாக்குவதே எங்களது அணுகுமுறை என்றும் தெரிவித்தார்.
அனைவரும் தங்கள் கட்சி மற்றும் தனிப்பட்ட இலட்சியங்களைப் பற்றி சிந்திப்பதை விட ஒரு பொதுவான திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அறிவிப்பு
இதேவேளை, இந்த விடயம்
தொடர்பில் கருத்துத் தெரிவித்த
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்
செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,
தமது கட்சி தற்போது அழகப்பெரும
தலைமையிலான குழுவுடன்
கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக
தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேசிய சுந்திர
முன்னணியுடன் இணைய முடியுமா
என்பது தெளிவாகத் தெரியவில்லை
என்றார்.
