ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் கட்சி தலைவரும் முன்னாள் படைத்தளபதியும் விரைவில் கைது..!
ஈஸ்டர் தாக்குதல்(easter attack) தொடர்பாக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின்படி, முன்னாள் படைத் தளபதி மற்றும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அண்மையில் சனல் 4 ஊடாக வெளிப்படுத்திய ஹன்சீர் ஆசாத் மௌலானாவிடம், அது தொடர்பான மேலதிக விபரங்களை 'ஜூம்' தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சாட்சியங்களைப் பெற்று, நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் மேலும் தெரியவந்துள்ளது.
ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசேட அறிக்கை
சனல் 4 நிகழ்ச்சி குறித்து, முன்னாள் அரசாங்கத்தால் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஐ. ஜனாப் இமாம் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசேட அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆசாத் மௌலானா
ஆனால் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்குமாறு ஆசாத் மௌலானா கோரப்பட்டிருந்ததுடன், தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |