விசேட கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு மத்திய வங்கி அதிகாரிகளுக்கும் அழைப்பு!
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஏனைய அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி இடம்பெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (29) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தின் போது மத்திய வங்கி ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு குறித்து கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி அதிகாரிகள்
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பதால் மார்ச் 4-ம் திகதி நடைபெறும் கூட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மத்திய வங்கி அதிகாரிகளும் அன்றைய தினம் பொது நிதிக் குழுவின் முன் பிரசன்னமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |