கவிஞர் வில்வரசனின் "பசி உறு நிலம்" கவிதை நூல் வெளியீடு..!
ஜீவநதியின் 263 வது வெளியீடாக, பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவன் வில்வரசனின் "பசி உறு நிலம்" கவிதை நூல் வெளியீடானது 2023.04.20 நேற்று பகல் 12 மணியளவில் பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர் மன்ற ஏற்பாட்டில் பேராசிரியரும் துறைத்தலைவருமான ஸ்ரீ.பிரசாந்தன் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தலைமையுரையாற்றியதோடு நூலை வெளியீட்டு வைத்தார். நூலின் முதற்பிரதியை துணுக்காய் கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் சு. லோகேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
"பசி உறு நிலம்"
அத்துடன் சிறப்புரையை துணுக்காய் கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் சு. லோகேஸ்வரன் அவர்கள் வழங்கினார்.
மேலும், நூலிற்கான அறிமுக உரையை தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ.சுதர்சன் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து நூல் விமர்சன உரை செல்வி தனுஷா இராஜேந்திரம் அவர்கள் வழங்க, இறுதியாக ஏற்புரையை நூலின் ஆசிரியர் கவிஞர் வில்வரசன் வழங்கினார்.
நிகழ்வில் கலைப்பீட விரிவுரையாளர்கள் மற்றும் பல்வேறுபட்ட பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.




