தமிழகத்திற்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்
tamilnadu
nigeria
omicron
By Sumithiran
நைஜீரியாவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த நபருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினருக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் பயணித்த வளசரவாக்கத்தை சேர்ந்த நபருக்கும் s gene drop இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 8 பேருக்கு s gene drop அதாவது ஒமிக்ரோன் இருக்கலாம் என சந்தேகம் எழுந்து அதில் ஒருவருக்கு மரபணு பகுப்பாய்வில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்து முடித்தபின் முடிவுகள் தெரியும் என்றும் அமைச்சர் கூறினார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்