விமானியை தாக்கிய பயணியால் ஏற்பட்ட பரபரப்பு
டெல்லி விமானத்தில் பயணித்த பயணியொருவர் விமானியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று முன்தினம்(14)110 விமானங்கள் தாமதமாக புறப்பட்ட நிலையில், 79 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோவா செல்லவிருந்த விமானமும் தாமதமாக புறப்பட்டது.
விமானியை தாக்கிய பயணி
இது குறித்த அறிவிப்பை வெளியிட வந்த விமானியை சாஹில் கட்டாரியா என்ற பயணி தாக்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை விமானத்தில் இருந்த சக பயணியொருவர் காணொளி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அந்த காணொளி பேசுபொருளாகியுள்ளது.
மேலும், விமானத்திலிருந்து அந்த பயணி வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முறைப்பாடு செய்த விமானி
பின்னர், சாஹித் கட்டாரியா தனது செயலுக்காக விமானி அனுப் குமாரிடம் மன்னிப்பு கேட்டு காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
Not going to lie - expected this to happen. Did not know it would happen so soon.
— Ravi Handa (@ravihanda) January 15, 2024
Context: a passenger punched an Indigo pilot because the flight was delayed.
And since there are no strong laws in India to prevent this, it will happen again. pic.twitter.com/P3bnTSGAGD
எனினும் மன்னிப்பை காணொளி ஏற்க மறுத்த விமானி அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
சாஹித் கட்டாரியா மீது ஐபிசியின் பிரிவு 323, 341மற்றும் 290 மற்றும் விமான விதிகளின் பிரிவு 22 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |