யாழ்ப்பாணம் உட்பட சில இடங்களுக்கான அறிவித்தல்:இன்று முதல் கடவுச்சீட்டுக்கான இணையவழி முன்பதிவு கட்டாயம்
Jaffna
Kandy
Department of Immigration & Emigration
Passport
By Sindu
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில், ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்று (29) முதல் இணையவழியில் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கச் செல்லும் முன்னர் இணையவழியில் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்பதிவு முறை பொருந்தாது
அதன்படி கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா மற்றும் மாத்தறை பிராந்திய அலுவலகங்களில் இந்தச் சேவை நடைமுறைப்படுத்தப்படும்.

பத்தரமுல்ல தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு இந்த முன்பதிவு முறை பொருந்தாது என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |