இலங்கையின் சர்ச்சைக்குரிய போதகரின் எழுத்தானை மனு மீளெடுப்பு
இலங்கையின் சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாம் தாக்கல் செய்திருந்த எழுத்தானை மனுவை இன்று மீள பெற்றுள்ளார்.
இந்த மனு தொடர்பான விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறித்த மனுவை மீள பெற்றுக் கொள்வதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தம்மைக் கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ எழுத்தானை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
எழுத்தானை மனு
குறித்த எழுத்தானை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில், ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறித்த எழுத்தானை மனுவை மீள பெற்றுக் கொள்வதாக தெரவித்துள்ளார்.
