குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான சம்பிக்க ரணவக்க
Champika Ranawaka
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan political crisis
By Shalini Balachandran
மகாஜன எக்சத் பெரமுனவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு(CID) வருகை தந்துள்ளார்.
இரத்தினபுரியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காகவே அவர் வருகை தந்துள்ளார்.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு இன்று(30) தமது அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.
விசாரணை
அத்தோடு விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறும் நேற்று (29) குறித்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்