UNP தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார் - ரணில் அறிவிப்பு
கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று (17.12.2025) பிற்பகல் நடந்த ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “அடுத்த ஆண்டு முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதால் மேற்கண்ட விடயங்களை விரைவுபடுத்த வேண்டும்.
தலைமைப் பதவியில் இருந்து விலகி
அந்த விவாதங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு விரும்பினால், அது தனக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது.”

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்புடைய பேச்சுக்களின் போது, தான் தலைமைப் பதவியில் இருந்து விலகி சஜித் அல்லது வேறு ஒருவருக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டால், செயற்குழு அதற்கு ஆதரவாக இருந்தால், அதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
நாட்டை முன்னேற்ற நடவடிக்கை
அத்தகைய கூட்டணிக்கு எந்த நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும், நீண்ட காலமாக கட்சித் தலைவராக இருந்து வருகிறேன்.

நாட்டின் ஜனாதிபதியானேன். நான் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்டேன் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாடு ஒரு கடினமான தருணத்தில் இருந்தபோது, நான் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தேன்.
எனவே, இந்த பதவி விலகலில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும்," என்று ரணில் விக்கிரமசிங்க செயற்குழுவிடம் மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்