யாழில் பணத்தை வசூலிக்க அடி - உதை..! முதன்மை குற்றவாளி உள்ளிட்ட ஐவர் கைது

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Kiruththikan Jan 28, 2023 10:06 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்களின் முதன்மை சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் பெப்ரவரி 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்நிலையத்தில் சரண்

யாழில் பணத்தை வசூலிக்க அடி - உதை..! முதன்மை குற்றவாளி உள்ளிட்ட ஐவர் கைது | Payment Metered Interest Five Arrested Suspect

அத்துடன் சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர் சுன்னாகம் காவல்நிலையத்தில் நேற்று சரணடைந்துள்ளார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மீற்றர் வட்டிக்கு பணம் பெற்றவர்களை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த காணொளிகள் தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது. மீற்றர் வட்டிக்கு வழங்கிவிட்டு பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்துத் துன்புறுத்தும் இருபதற்கும் மேற்பட்ட காணொளிகள் காவல்துறை உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டன.

அவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சுன்னாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காரில் பயணித்தவரை வாகனத்தினால் மோதி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக காவல்துறையில் சரணடைந்த ஜெகன் உள்ளிட்ட மூவருக்கும் மீற்றர் வட்டிக்கு பெற்றவர்களை அடித்துத் துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புள்ளமை தெரியவந்தது.

பலரை அடித்துத் துன்புறுத்தல்

யாழில் பணத்தை வசூலிக்க அடி - உதை..! முதன்மை குற்றவாளி உள்ளிட்ட ஐவர் கைது | Payment Metered Interest Five Arrested Suspect

மருதனார்மடம் சந்தைக்கு அண்மையாக உள்ள தோட்டக்காணிக்கு அழைத்தே பலரை அடித்துத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் உள்ளனர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

காணொளியில் முகக்கவசம் அணிந்து அடித்து துன்புறத்தும் நபர் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் பிரதீப்பின் குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

முதன்மை சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரை பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார். காணொளியில் தலைக்கவசம் அணிந்தவாறு தாக்குதல் நடத்துபவர் என அடையாளம் காணப்பட்டவர் சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் முதன்மை சந்தேக நபருடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவரை நேற்றிரவு கைது செய்தனர்.

மீற்றர் வட்டிக்கு பணம் 

யாழில் பணத்தை வசூலிக்க அடி - உதை..! முதன்மை குற்றவாளி உள்ளிட்ட ஐவர் கைது | Payment Metered Interest Five Arrested Suspect

“கைது செய்யப்பட்ட முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் நாளாந்த மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு முச்சக்கர வண்டி சாரதி கூலிக்கு உதவியுள்ளார்.

நாளாந்த வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் ஒரு வாரத்துக்கு பணத்தையோ வட்டியையோ வழங்காவிடின் அவர்களை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து அடித்து துன்புறுத்துவதை இந்தக் கும்பல் முன்னெடுத்துள்ளது.

சிறு முயற்சிகளில் ஈடுபடுவோர் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நாளாந்த வட்டிக்கு இந்தக் கும்பலிடம் பணத்தை வாங்கி பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் துன்புறுத்தப்பட்ட எவரும் முறைப்பாடு வழங்கவில்லை.

கைது செய்யப்பட்ட அனைவரும் காணொளி ஆதரத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016