அமைதியாக இடம்பெற்றுவரும் தேர்தல்: பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (DIG Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்றையதினம் (14.11.2024) நடைபெற்ற ஊடகவியளார் சந்திப்பின் போதே அவர் மேற்குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள்
கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி, மன்னார் (Mannar) மற்றும் பியகம பகுதியைச் சேர்ந்த 49, 19 மற்றும் 26 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களைத் தவிர எந்தவொரு இடத்திலும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகவில்லை எனவும் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாலை வேளையில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் அனைவரும் நேரத்துடனே வாக்களிக்க வருமாறு பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |