புதிய சிற்றூழியர்களின் சீருடை அவமதிப்பை எதிர்த்து சிற்றூழியர் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கை!
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை அவமதிப்பை எதிர்த்து சிற்றூழியர்களின் சங்கத்தினால் பேராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (17) 6 தொழில் சங்கங்களின் ஆதரவுடன் அமைதியாக இடம்பெற்றுள்ளது.
எதிர்ப்பின் கருப்பொருளாக
- மத ரீதியான சீருடைக்கு அனுமதி இல்லை.
- நிர்வாகத்திற்கு கட்டுப்படாத புதிய பெண் ஊழியர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுங்கள்.
- சட்டம் கலாச்சார உடையை அங்கிகரிக்குமானால் இனி சீருடை என்ற விதியை அகற்றுங்கள்.
- சகல மதத்தவருக்கும் சீருடை விலக்கை தாருங்கள்.
- எமது வேண்டுதல்களுக்கு உடன் தீர்வு தாருங்கள்.
- இன்றைய போராட்டம் தீர்வு இல்லையேல் இனி தேசிய ரீதியாக தீவிரமாகலாம் என்ற விடயங்கள் காணப்பட்டுள்ளன.





செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்