தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த பேரினவாதம்! ஐ.நாவில் அநீதிகளை அடுக்கிய பேர்ள் அமைப்பு

United Human Rights Sri Lankan Tamils Sri Lanka Government Of Sri Lanka
By Sathangani Mar 05, 2024 06:56 AM GMT
Report

சிங்கள பௌத்த பேரினவாதமே தொடர்ந்தும் இலங்கையில் முக்கிய இயங்குசக்தியாக காணப்படுகின்றது என இலங்கையில் சமத்துவம் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இங்கே மனித உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன எனவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையின் பின்னர் இடம்பெற்ற பொது விவாதத்தில் பேர்ள் அமைப்பு, இலங்கையில் 15 வருடங்களிற்கு முன்னர் இழைத்த யுத்தக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றை நினைவுகூர்ந்தது. 

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

சிங்கள பௌத்த பேரினவாதம் 

இங்கு தொடர்ந்தும் குறிப்பிட்ட விடயங்களாக “இலங்கையில் இடம்பெற்ற அநீதிகளிற்கு இதுவரை நீதியோ பொறுப்புக்கூறலோ இல்லை,  169,796 தமிழர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது, அவர்கள் உயிரிழந்துவிட்டனர் என கருதப்படுகின்றது.

அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் நீதி ஆகியவற்றை முன்னெடுப்பதில் இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்த அரசியல் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை.

தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த பேரினவாதம்! ஐ.நாவில் அநீதிகளை அடுக்கிய பேர்ள் அமைப்பு | Pearl Pointed Out The War Crimes Committed In Sl

தற்போதைய அரசாங்கம் வெற்று நல்லிணக்க பொறிமுறைகளையே முன்வைக்கின்றது,  இந்தப் பொறிமுறை கடந்தகால உள்நாட்டுப் பொறிமுறைகளைப் போல பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளை தீர்க்கப்போவதில்லை, மோதல்களின் அடிப்படைகளுக்கு தீர்வை காணப்போவதில்லை.

அதேவேளை, சிங்கள பௌத்த பேரினவாதமே தொடர்ந்தும் இலங்கையில் முக்கிய இயங்குசக்தியாக காணப்படுவதுடன் மனித உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகின்றன.

வெடுக்குநாறிமலைக்காக அரங்கேறும் சூழ்ச்சிகள்! உறுதியளித்த நிர்வாகத்தினர்

வெடுக்குநாறிமலைக்காக அரங்கேறும் சூழ்ச்சிகள்! உறுதியளித்த நிர்வாகத்தினர்

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை சாதனங்களால் தமிழர்களும் முஸ்லிம்களும் தொடர்ந்தும் பாதிக்கப்படுவார்கள்.

கடந்தகால குற்றங்களிற்கு அப்பால் பாரிய இராணுவமயப்படுத்தல், நினைவுகூரலை ஒடுக்குதல், தமிழர் தாயகப்பகுதிகளில் அதிகளவு சிங்களமயப்படுத்தல் போன்றவை காணப்படுகின்றன.

தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள பௌத்த பேரினவாதம்! ஐ.நாவில் அநீதிகளை அடுக்கிய பேர்ள் அமைப்பு | Pearl Pointed Out The War Crimes Committed In Sl 

மோதல்களிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காண்பதற்கும் இலங்கையில் ஸ்திரமின்மையை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் தமிழர்கள் தொடர்ச்சியாக சுயாதீன சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளிற்கும் சுயநிர்ணய உரிமைக்கும் வேண்டுகோள் விடுத்துவந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தை தமிழர்களிற்கு எதிரான குற்றங்களிற்கு பொறுப்புக்கூறச்செய்வதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற செய்தியை தெரிவிக்க முடியும்.”  எனவும் குறிப்பிட்டுள்ளது.

கூகுள் வரைபடத்தை நம்பி அலரி மாளிகைக்குள் புகுந்த இளைஞர்கள்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கூகுள் வரைபடத்தை நம்பி அலரி மாளிகைக்குள் புகுந்த இளைஞர்கள்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021