பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமனம்
Gotabaya Rajapaksa
University of Peradeniya
Government Of Sri Lanka
By Kiruththikan
பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (06) அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
திரு. ஜி.எச். பீரிஸ் 1960 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதல் தரப் பட்டத்துடன் புவியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் மேலும் 1965 இல் UK கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் (பொருளாதார புவியியல்) பெற்றார்.
இவர் முதலில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு 44 வருடங்களாக பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.
பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொடர்பாக அதிக ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி