நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு : வெளியான தகவல்
Parliament of Sri Lanka
Ravi Karunanayake
Sri Lanka
By Raghav
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்வது தொடர்பான பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
குறித்த பிரேரணையானது இன்றைய தினம் (07.02.2025) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
தனிநபர் பிரேரணை
தனிநபர் பிரேரணையாக இந்த யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) முன்வைக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கு நாட்டின் வாக்காளர்கள் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர்.
இதனைக் கருத்திற் கொண்டு இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்