ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு - அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை
எதிர்காலத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுமாயின் சவால்மிக்கதாக அமையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்காலத்தில் பணவீக்க அதிகரிப்புக்கு ஏதுவானதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் வசந்த அதுகோரல (Wasantha Athukorala) கூறியுள்ளார்.
அரச மற்றும் தனியார் துறை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக அரச சேவைக்கு 30 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த காரணிகளால் எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்க கூடும் என பேராசிரியர் வசந்த அதுகோரல எச்சரித்துள்ளார்.
ஓய்வூதிய கொடுப்பனவு
இதேவேளை, ஓய்வூதிய கொடுப்பனவுக்காக தற்போது 500 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. எதிர்காலத்திலும் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுமாயின் அதுவும் சவால் மிக்கதாக அமையும்.
உற்பத்தி துறையின் வினைத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு புதிய திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்த சிறந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டுமென அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்