தையிட்டி விவகாரத்தில் தூண்டப்படும் இனவாதம்: அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்
தையிட்டி விகாரையை இடிப்பது இனவாதத்தை கட்டியெழுப்பும் ஆகவே தான் அதை இடிக்க வேண்டாமென நான் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) தெரிவித்திருந்தேன் என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (24) நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றாக இணைந்த வாழ வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
எந்தவொரு கோவில் மற்றும் விகாரை இடிக்கப்பட்டாலும் அது கலவரத்தை தூண்டக்ககூடிய விடயமாக மாறும், சிலர் அதை உடைத்ததெறிய வேண்டும் என தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசின் வரவு செலவு திட்டம், வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி என்பன தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
