அரச ஊழியர்களின் சம்பளம்: அரசாங்கத்தினால் செலவிடப்படவுள்ள பெருந்தொகை
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக அரசாங்கம் 325 பில்லியன் ரூபாவை செலவிடும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சம்பள உயர்வு
அதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “வங்குரோத்து நிலைக்குச் சென்ற நாடொன்று, அதிலிருந்து மீண்டு தாக்கல் செய்யும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
அதனூடாக இந்த அளவுக்கு அரச சேவையில் சம்பள உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் 102 பில்லியன் ரூபாவும், 2026 ஆம் ஆண்டில் 128 பில்லியன் ரூபாவும், 2027 ஆம் ஆண்டில் 95 பில்லியன் ரூபாவும் செலவிடப்படும்.
அதன்படி, இந்த சம்பள அதிகரிப்புக்காக 325 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 17 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்