சஜித்தின் கட்சிக்குள் வெடித்தது மோதல் -ஒப்புக்கொண்ட முக்கியஸ்தர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாசவின் குறைபாடுகள் தொடர்பில் சமூகத்தில் பேச்சொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க(Tissa Attanayake)தெரிவித்துள்ளார்.
யூடியூப் அலைவரிசையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
குறைபாடுகள் இருந்த போதிலும் வேறு வழிக்கு செல்ல முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சிக்குள் சில தகவல்களை வெளியிடுபவர்களால் கருத்து மோதல்கள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணசிங்க பிரேமதாச பற்றி தொடர்ச்சியாக பேசி தற்போது அரசியலை முன்னெடுக்க முடியாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து தொடர்பிலும் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த காலத்தை மறந்து அரசியல் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
