மக்களால் நிம்மதியாக புத்தாண்டை கொண்டாட முடியவில்லை - சஜித் பிரேமதாச
Samagi Jana Balawegaya
Sajith Premadasa
People Protest
Srilankan Economic Crisis
By Kanna
தன்னிறைவுப் பொருளாதார நாடாக இருந்த நாட்டில் இன்று மக்களால் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் புத்தாண்டை கொண்டாட முடியவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது விசேட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒருபுறம் பெற்றோர் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் அலைக்களிக்கப்படுவதுடன் மறுபுறத்தில் பிள்ளைகள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான சூழல் முடிவுற்று, வளமான அமைதியான நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக இந்த ஆண்டு பிறந்து அனைவரின் கனவுகளும் நனவாக பிரார்த்திக்கிறேன் என சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியை மக்களுக்கு வழங்கியிருந்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி