வேகமெடுக்கும் கொரோனா தொற்று - மூன்று நகரங்கள் முற்றாக முடக்கம் -வெறிச்சோடியது கொழும்பு
colombo
travel restriction
corona increase
By Sumithiran
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மூன்று நகரங்கள் தாமாகவே முடக்கல் நிலைக்கு சென்றுள்ளன.
இதன்படி கம்பஹா – மரதஹமுல்ல நகரம் நாளை திங்கட்கிழமை முதல் ஒருவாரத்திற்கு மூடப்படவுள்ளது.
அம்பலந்தோட்டை நகரம் இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அனுராதபுரம் – கெக்கிராவ நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் வரும் 27ம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.
இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு நகரம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







1ம் ஆண்டு நினைவஞ்சலி