சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய இருவர் சிக்கினர்!
வெளிநாடுகளில் வசிக்கும் முக்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் இரண்டு நபர்களை காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) கைது செய்துள்ளது.
எகொடஉயன (மொரட்டுவ) மற்றும் உன்னருவ (மினுவாங்கொட) ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களுக்கு போதைப்பொருள் பாதாள உலகில் பிரபலமாக உள்ள நபர்களுடன் முக்கிய தொடர்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, மோதரவில் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர், துபாயில் இருந்து செயல்படுவதாக நம்பப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான "துபாய் தரங்க"வின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மெத்தம்பேட்டமைன் பறிமுதல்
STF அதிகாரிகள் அவரிடம் இருந்து 5 கிராம் 130 மில்லிகிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உன்னருவவில் நடத்தப்பட்ட தனி நடவடிக்கையில், மற்றொரு நபர் ஐஸ் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் மற்றொரு பாரிய குற்றவாளியான "சுன்னா" என்று அழைக்கப்படும் "சுனில் சாந்தவின்" நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |