டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையை புறக்கணிக்கும் மக்கள்
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவு போதுமானதாக இல்லை என கொழும்பு மாவட்ட பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜய விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு நேற்று (07) முதல் விசேட டெங்கு தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதிகளவான நோயாளர்கள்
அத்தோடு, கொழும்பு, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி வெள்ளவத்தை பிரதேசத்தில் ஹம்பர் வீதியிலுள்ள வேலுவன வீடமைப்புத் தொகுதியில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்போது, உரையாற்றிய கொழும்பு மாவட்ட பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜய விஜயமுனி, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவு போதுமானதாக இல்லை எனவும் அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |