பேசுபொருளாக மாறிய ஹரிணின் கருத்து: ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்
சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரிண் பெர்னாண்டோவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் எனும் அமைப்பால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சாதகமாக ஹரிண் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டதை தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் கருத்து வெளியிட்டமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
தேசத்துரோகி
பொறுப்பற்ற வகையில் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்ததாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் எனும் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேசத்துரோகியாக கருதப்படும் சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
அரசியலமைப்பை ஹரின் பெர்ணான்டோ மீறியுள்ளார், நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது, ஹரினிண் கருத்து தொடர்பில் மகிந்த மௌனம் காப்பது ஏன்?, உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |