பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் அமைப்புக்களை அச்சுறுத்தாதே - கிளிநொச்சியில் போராட்டம்!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள், பொது அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
வயில் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
உபகரணங்களும் ஆவணங்களும் திருடப்பட்டமை
கிளிநொச்சி தொண்டமான் நகர் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பு அலுவலகம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வாழ்வுரிமை சங்க அலுவலகம் உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த இரண்டு மடிக்கணினிகள் மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்களும் ஆவணங்களும் களவாடப்பட்டுள்ளன.
போராட்டம்
குறித்த சம்பவத்தை கண்டித்தும், நீதிகோரியும் வயில் கறுப்பு பட்டிகளை அணிந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் மக்கள் அமைப்புக்களை அச்சுறுத்ததே", "பின்தொடர்தல் வேண்டாம்", "மக்களுக்கு சேவை ஆற்றும் அமைப்புக்களுக்கு தடை போடாதே" போன்ற வசனங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
