மிக விரைவில் தேர்தல் - பசில் அறிவிப்பு
மிக விரைவில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்பார்ப்பு என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தானும் கட்சியும் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை கூடிய விரைவில் நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை எதிர்வரும் 9ஆம் திகதி அநுராததபுரத்தில் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐந்து மாகாணங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும்
பொதுஜன பெரமுனவினரால் கிராமங்களில் மகளிர் சங்கங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
