தமிழ் தேசியத்திற்கு யார் தேவை என்பதை மக்கள் தெரிவு செய்யவேண்டும்-மாதவமேஜர்!
தமிழ்தேசத்தின் நிரந்தர தீர்விற்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புக்கள்,தனிநபர்கள் அனைவரும் ஒன்றுபட வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சமூக செயற்பாட்டாளரான வேலுப்பிள்ளை மாதவமேஜர் மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டம் 11.01.2023 இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது.
09.01.2023 அன்று புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் தொடங்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிலர் தங்கள் ஆதரவினை வழங்கி வருகின்றார்கள்.
தமிழ் கட்சிகளின் ஒற்றுமையினை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் போராட்ட களத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் வேலுப்பிள்ளை மாதவமேஜர் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கருத்து தெரிவித்த உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் வேலுப்பிள்ளை மாதவமேஜர்,
ஈழத்தமிழர்களின் சாபக்கேடு
தமிழ் மக்களுக்கு எந்த நாட்டினாலும் ஒன்றும் கிடைக்காது இது வரலாற்று பாடம் இதனை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.தமிழர்களின் விடிவிற்காக ஒன்றரை இலட்சம் மக்களை இழந்துள்ளோம் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களை நாங்கள் இழந்துள்ளோம் இன்று வரை சிறைகளில் ஆயுட் கைதிகளாக அரசியல் கைதிகளாக மீளமுடியாத நிலையில் உறவுகள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க வேண்டும் என்றால் அரசியல் பலம் அந்த அரசியல் பலத்தினை இல்லாமல் செய்வோம் என்றால் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடந்த நிகழ்வு ஒரு காலத்தில் புதுக்குடியிருப்பு மண்ணிலும் நடக்கும் அந்த காலத்தில் நாங்கள் போராட இருக்க மாட்டோம் உங்கள் பிள்ளைகளின் அடுத்த தலைமுறைதான் போராடுவார்கள் இதுதான் ஈழத்தமிழர்களின் சாபக்கேடு
அரசியல் குழப்பம்
எங்களின் அரசியல் பலத்தினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயணத்தில் அரசியல் குழப்பம் ஒன்று சூழ்ந்திருந்தது தமிழர்களின் ஒற்றுமைக்காக எங்களுடைய முன்னோர்களால் உருவாக்கப்பட்டதுதான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இது தமிழர்களின் பலமாகும். 2015 ஆம் ஆண்டு தமிழ்தேசியக்கூட்டமைப்பினை உடைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அது சறுகல் நிலையில் இருந்தது.
இன்று உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு உடைபடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன இதற்கு வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ்மக்கள் வீதிகளில் பதாதைகள் ஏந்தி வீதி வீதியாக மாவட்டம் மாவட்டமாக அறவழி போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக நான் இவர்களை எவ்வாறு ஒன்று சேர்க்கலாம் என்று யோசித்து பார்த்தேன். அதன் ஒரு முடிவாகத்தான் நீர் ஆகாரம் இன்றிய உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்தேன் எனக்கு பெரும் ஆதரவினை தந்தார்கள்.
உரிமை போராட்டம்
இது எனது போராட்டம் அல்ல எங்களின் உரிமை போராட்டம் மக்களின் போராட்டம் இந்த போராட்டத்தினை மக்கள் போராட்டமாக விஸ்தரிக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். தமிழ்தேசியத்திற்கு யார் தேவை என்பதை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் அந்த முடிவினை உங்களிடம் நான் ஒப்படைகின்றேன் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற அத்தனை அரசியல் தலைமைகளும் ஒன்று சேர்ந்து வருவார்களாக இருந்தால் அவர்களே தமிழ்தேசியத்தின் தலைவர்கள் என்றுமாதவமேஜர் தெரிவித்துள்ளார்.












நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
