வெளிநாடொன்றில் மக்களை வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாமென எச்சரிக்கை
Brazil
Weather
By Sumithiran
பிரேசில் நாட்டில் வெப்ப அலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடும் வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று(18) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகளவு வெப்பம் ஆகும்.
வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்
வரும் தினங்களிலும் இதேபோல் வெப்பநிலை நிலவும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் நீர் நிலைகள், கடற்கரைகளில் தஞ்சம்
உஷ்ணத்தை தணிப்பதற்காகவும், இதமான காற்று வாங்குவதற்காகவும் பொதுமக்கள் நீர் நிலைகள் அருகேயும் கடற்கரைகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக, ஐபனிமா மற்றும் கோபகபனா கடற்கரைகள் மக்களால் நிரம்பி வழிகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி