ஜப்பானிலும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள்!
srilanka
people
government
japan
struggle
By Thavathevan
சிறி லங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள் தலைநகர் டோக்கியோவில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் அரசியல் பேதங்களில் இன்றி கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜீவ குணசேகர, கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க நண்பர் என தெரிவிக்கப்படுகிறது.
இவரும் அமெரிக்காவில் இருந்து வந்து ஜப்பானில் இலங்கையின் பெயரை அவமதிப்பிற்குள்ளாக்கி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் குற்றம் சுமத்தியுள்னர்.
அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகும் வரை தாம் தொடர்ந்தும் போராட்டங்களை நடத்த போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி