மஸ்கெலியா பகுதியில் மின்சாரம் இன்றி மக்கள் அவதி
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் இன்றி மக்கள் பெருமளவில் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக மஸ்கெலியா நல்லதண்ணி காவல் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தினால் நேற்று 08 மாலை சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரியர்கள் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நேற்று எட்டாம் திகதி மூன்று மணிக்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு இரவு 9.30 இற்கு மீண்டும் மின் இணைப்பு கிடைக்கப் பெற்றது.
சிவனடிபாத மலை
இதனால் இந்த வேளையில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பாரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகி விட்டனர்.
மேலும், சிவராத்திரி விரதத்திற்காக வந்த பக்தர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் தரிசனம் செய்ய வந்த வயோதிபர், இளைஞர், யுவதிகள், சிறுவர்கள் மற்றும் கை குழந்தைகள் உட்பட அங்குள்ள அனைத்து வர்த்தகர்களும் பாரிய அசௌகரியத்தை எதிர் நோக்கினர்.
அதேபோல் இப் பகுதியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் மக்கள் பூஜைகள் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |