“நாட்டு மக்களோ வரிசையில் - மகிந்தவின் புதல்வரோ குதூகலத்தில்” காணொளியால் எழுந்த கடும் விமர்சனம்
Namal Rajapaksa
Maldives
SriLanka
By Chanakyan
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாலைதீவில் உள்ள பறக்கும் பலகை பயிற்றுவிப்பாளர், நாமல் ராஜபக்சவின் காணொளியை வெளியிட்டு, இலங்கை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடியால் அடிப்படை வசதிகள் இன்றி இலங்கையர்கள் தவித்து வரும் நிலையில், ராஜபக்ச மாலைதீவுக்கு பயணம் செய்ததன் நோக்கம் என்ன? என சமூக ஊடகங்களில் பல இலங்கையர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்ச இதுவரையில் பதிலளிக்கவில்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி