சாம்பலில் இருந்து மீண்டெழுகிறது பெரமுன
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
சிறிலங்கா பொதுஜன பெரமுன தற்போது சாம்பலில் இருந்து எழுந்து வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு இந்த நாட்டில் அதிகாரத்தை தக்கவைக்கும் என்றும் அவர் கூறினார்.
அதற்கான ஏற்பாடுகளை கட்சி ஏற்கனவே செய்து முடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி