இரண்டு வாரங்களுக்குள் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம்..! போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Driving Licence
By Kiruththikan
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படும் என போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக 600,000 தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவில் இருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரம்
இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் குறித்த அட்டைகள், இலங்கைக்கு கிடைத்து விடும் என திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்