இறுதி யுத்தத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்ட நிரந்தர வீடுகள்
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகிய தென்னவன் மரபு அடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாது சொந்த வீடுகள் இல்லாது வாழ்க்கை நடத்தி வந்த நான்கு குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகள் இன்று (09) உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறித்த கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் உள்நாட்டு யுத்தம் காரணமாக முற்றாக இடம்பெயர்ந்து மீழக் குடியமர்ந்த பின்னராக போதுமான அடிப்படை வசதிகள் கிடைக்காத வண்னம் தினமும் புறக்கணிக்கப் படும் நிலையில் தமது வாழ்க்கையை நடத்திவந்த நிலையில் அம் மக்களுக்கான உதவித்திட்டமாக இது அமைந்துள்ளது என்பது விசேட அம்சமாகும்.
ஜீவ ஊற்று அன்பின் கரம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை ஆகிய அமைப்புக்கள் (Pledge to Restore Foundation) இணைந்து குறித்த திட்டத்தினை முன்னெடித்திருந்தது.
வீடுகள் கையளிப்பு
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்ற பிரதேச செயலாளர் குணநாதன் மற்றும் குறித்த அமைப்பின் உறுப்பினர் உதயன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் அத்தநாயக்க ஆகியோர் வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் தென்னைவன் மரபு அடி கிராம உத்தியோகஸ்த்தர், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர், கிராம அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஏனைய அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், குறித்த கிராமத்தினை சேர்ந்த பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு பாடசாலை மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களும் சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவுப் பரிசுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |