காடுகளில் விளையும் பலாப்பழங்கள் - அமைச்சர் விடுத்த உத்தரவு
Food Shortages
Jack Fruit
Mahinda Amaraweera
Sri Lanka Food Crisis
By Sumithiran
காடுகளில் விளையும் பலாப்பழங்கள்
காடுகளில் விளையும் பலாப்பழங்களை அறுவடை செய்வதற்காக மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதற்கான அனுமதிப்பத்திரத்தை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உணவு நெருக்கடி
காடுகளில் விளையும் பலாப்பழம் மற்றும் ஈரப்பலாக்காய்களை அறுவடை செய்ய மக்களை அனுமதிப்பதன் மூலம் உணவு நெருக்கடியை ஓரளவு குறைக்க முடியும் என்றும் அமைச்சர் வனத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.
நாடளாவிய ரீதியில் சுமார் 3000 ஹெக்டேர் வன நிலங்கள் இருப்பதாகவும், அந்த நிலங்களில் பலாப்பழம் உற்பத்தியாகி மரத்தடியில் விழுந்து பயன்பாடின்றி அழுகி வருவதாகவும் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி