வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி: விதிக்கப்பட்ட நிபந்தனை
Manusha Nanayakkara
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kiruththikan
வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றால், வரிசைகளை அகற்றவும், மக்களுக்கு மருந்துகளை வழங்கவும், மின்வெட்டை நிறுத்தவும் முடியும் என்று அவர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம். சில வரிச் சலுகைகளை வழங்கவும் நான் முன்மொழிகிறேன். என தெரிவித்தார்

மரண அறிவித்தல்