கட்டுநாயக்காவில் தரையிறங்கிய வெளிநாட்டவர் கைது
Bandaranaike International Airport
Sri Lanka
Venezuela
By Shalini Balachandran
கொக்கேய்ன் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 12 மாத்திரைகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அந்த நபர் கைதாகியுள்ளார்.
மாத்திரைகள்
சந்தேக நபர் பிரேசிலில் இருந்து டுபாய் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மேலும் 41 வயதுடைய இவர் வெனிசுலாவைச் சேர்ந்தவரென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவரிடம் இருந்து 132 கிராம் எடையுடைய 12 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி