யாழ்ப்பாணத்தில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
56 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 1.56 கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை தனது உடைமையில் வைத்திருந்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
போதைப் பொருள் தடுப்பு பிரிவுகள் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் குறித்த நபர் கைதானார்.
குறித்த நபர் விற்பனை செய்வதற்காக தனது வீட்டில் வைத்து சிறு பொதிகளை உருவாக்கிய பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 24 வயதுடைய புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்