போராட்ட வெற்றிக்களிப்பை கொண்டாட மின்கம்பத்தில் ஏறிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் (படம்)
Colombo
Sri Lankan Peoples
Gota Go Gama
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
போராட்ட வெற்றிக்களிப்பு
நேற்றையதினம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வெற்றிய கிட்டியதை அடுத்து (09) தேசியக் கொடியுடன் மின்கம்பத்தில் ஏறியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
அவரது சடலம் அலவ்வ கபுவரல புகையிரதப் பாதையில் இன்று (10) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தை
அலவ்வ குடுமுல்ல பகுதியைச் சேர்ந்த சமிந்த லால் குமார் (வயது 39) என்பவரே சடலமாக மீடகப்பட்டவராவார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
