யாழில் 4 வயது மகளை வைத்து யாசகம் பெற்ற தந்தை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Batticaloa Jaffna Sri Lanka Police Investigation Crime
By Laksi May 15, 2024 08:19 AM GMT
Report

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) வந்து, தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் யாழ்ப்பாணம் (Jaffna) - கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி, சிறுமியின் இரு சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளதாகவும் அதற்கான சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு கோரி யாசகம் பெற்றுள்ளார்.

யாழில் நிலவும் கடுமையான வெப்பமான காலநிலையில், வெயிலுக்குள் சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி வைத்து ஒருவர் யாசகம் பெறுவதாக கோப்பாய் காவல்துறையினருக்கு  இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் அரச உத்தியோகத்தரின் முத்திரையை போலியாக தயாரித்து நிதி மோசடி

யாழில் அரச உத்தியோகத்தரின் முத்திரையை போலியாக தயாரித்து நிதி மோசடி

வைத்திய பரிசோதனை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் யாசகம் பெற்ற நபரையும் கைது செய்துள்ளனர்.

யாழில் 4 வயது மகளை வைத்து யாசகம் பெற்ற தந்தை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Person Obtained Yasakam Lying Arrested In Jaffna

இதன்போது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் சிறுமிக்கு எவ்விதமான உடல்நல குறைப்பாடுகளும் இல்லை எனவும் சிறுமி ஆரோக்கியமாக உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

யாழ். வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு...! இளைஞன் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை

யாழ். வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு...! இளைஞன் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை

நீதிமன்ற உத்தரவு

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, தான் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் சிறுமி தனது மகள் எனவும் கூறியுள்ளார்.

யாழில் 4 வயது மகளை வைத்து யாசகம் பெற்ற தந்தை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Person Obtained Yasakam Lying Arrested In Jaffna

மேலும் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியை சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய வர்த்தகர்

பல இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய வர்த்தகர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021