சிறுமிகளின் படங்களை முகநூலில் பதிவிட்டவர் கைது
Sri Lanka Police
Facebook
By Sumithiran
பேஸ்புக் சமூக ஊடகங்களில் சிறுமிகளின் புகைப்படங்களை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பதிவிட்ட நபர் ஒருவர் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் யாதவர வத்தேகம பிரதேசத்தில் வசிப்பவராவார். குறித்த நபர் "Niloo Niloo" என்ற போலி கணக்கை உருவாக்கி அதில் சிறுமிகளின் படங்களை பதிவிட்டுள்ளார்.
இரண்டுமுறை திருமணம் செய்து விவாகரத்து
40 வயதுடைய சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் இரண்டு முறை திருமணம் செய்து தற்போது விவாகரத்து பெற்றவர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி