சுற்றுலா சென்ற நபர் நீரில் மூழ்கி மாயம்
Srilanka
Investigation
Negombo
drowning
Tour
Disappeared
By MKkamshan
மீமுரே பிரதேசத்தில் உள்ள நீரோடை ஒன்றில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக உடதும்பர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில் இருந்து குழுவினருடன் சுற்றுலாவுக்காக வந்துள்ள நிலையில் நேற்று பிற்பகல் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு திபிரிகஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் காணாமல் போன நபரை தேடி வருகின்றனர்.
உடதும்பர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
