அனைத்துலக பேசு தமிழா பேசு போட்டியில் இலங்கையை சேர்ந்த மோகனராஜ் ஹரிகரன் முதலிடம்..!
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
சர்வதேச அளவிலான பேசு தமிழா பேசு பேச்சு போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மோகனராஜ் ஹரிகரன் முதலிடத்தைப் பெற்று சாதித்துள்ளார்.
'வணக்கம் மலேசியா' தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் தஞ்சை தமிழ் பல் கலைக்கழகத்தின் அனுசரணையில் நடைபெற்ற அனைத்துலக 'பேசு தமிழா பேசு போட்டியில் 12 நாடு களை சேர்ந்த 48 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவன் மோகனராஜ் ஹரிகரன் பங்கேற்றிருந்தார்.
பேசு தமிழா பேசு
ஆறாவது தொடராக - நடைபெற்ற இந்தப் பேச்சுப் போட்டி நிகழ்நிலை வாயிலாக நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்றது.
இதில், மோகனராஜ் ஹரிகரன் முதலாம் இடத்தைப் பெற்று சர்வதேச பேசு தமிழா பேசு போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை தன் வசமாக்கினார்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி