கைது அச்சத்தில் மற்றுமொரு புலனாய்வுத்துறை அதிகாரி! நீதிமன்றம் விடுத்த உத்தரவு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியான கேணல் கெலும் மத்துமகே தாக்கல் செய்திருந்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஜூன் மாதம் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு முன்பு இந்த மனு இன்று(08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து முதற்கட்ட ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார்.
மனுதாரர் தரப்பு வாதங்கள்
அதனைத் தொடர்ந்து, இந்த மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெருமவும், சட்டமா அதிபரின் முதற்கட்ட ஆட்சேபனையை ஆதரித்து தனது வாதங்களை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து, இந்த முதற்கட்ட ஆட்சேபனைகள் குறித்து மனுதாரர் தரப்பு தங்களது வாதங்களை முன்வைப்பதற்காக, வழக்கை ஜூன் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்